BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கைதி! கொரோனாவுடன் தப்பி ஓட்டம்!
சென்னை அயனாவரத்தை சேர்ந்த முனீர்பாஷா, மண்ணடியை சேர்ந்த முகம்மது இஜாஸ் ஆகிய இருவரும் புளியந்தோப்பு ஆட்டுதொட்டியில் ஆட்டு இறைச்சி மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களது அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.61 லட்சம் பணத்தை திருடியதாக போலீசார் சாலமன், முகமது சபி ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதனையடுத்து இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், சாலமனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து முகமது சபி மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாலமனை, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா தனி வார்டில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற கைதி சாலமன், அங்குள்ள ஜன்னல் வழியாக தப்பி ஓடிவிட்டார்.
கழிவறைக்கு சென்று நீண்டநேரம் ஆகியும் கைதி வெளியே வராததால் போலீசார், அங்கு சென் பார்த்தபோது, கைதி தப்பி ஓடிவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொரோனா பாதிக்கப்பட்ட கைதியை தேடி வருகின்றனர்.