காவல்துறையின் விசாரணைக்கு பயந்த தொழிலாளி... பூச்சி மருந்து அருந்தி பரிதாபமாக பலி.!

காவல்துறையின் விசாரணைக்கு பயந்த தொழிலாளி... பூச்சி மருந்து அருந்தி பரிதாபமாக பலி.!


a-worker-from-thiruvallur-district-commits-suicide-afte

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே  நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க  காவல்துறையினர் அழைத்ததால் பயந்த தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மெயின் ரோடு அருகே உள்ள புதுப்பேடு பகுதியைச் சார்ந்தவர் சங்கர்  38 வயதான இவர் சோழிங்கநல்லூரில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுசித்ரா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று இவரது வீட்டிற்கு மணலி புதுநகர் காவல் நிலையத்தில் இருந்து மூன்று காவலர்கள் வந்தனர். 2009 ஆம் ஆண்டு  சங்கர் மீது போடப்பட்ட திருட்டு வழக்கு ஒன்றில் ஆஜராகுமாறு அவரை அழைத்தனர். நீண்ட நாட்களாக இந்த வழக்கில் ஆஜராகாததால் அவர் மீது நீதி மன்றம்  பிடிவாரண்ட் பதிவு செய்துள்ளதாகவும் வக்கீலை வைத்து இந்த வழக்கை விரைவாக முடிக்க  வேண்டும் எனவும் கூறினார்.

tamilnadu

மேலும் பிடிவாரண்டு இருப்பதால் தங்களுடன் வருமாறு அழைத்தனர். இதனால் பயந்து போன சங்கர் தனது வீட்டிற்குள் சென்று  விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட குடும்பத்தினர் மற்றும் காவலர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சங்கர்.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவி சுசித்ரா அளித்த புகாரின் அடிப்படையில் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும் இது குறித்து பேசிய சித்ரா தனது கணவர் சிறுவனாக இருந்தபோது போடப்பட்ட வழக்கிற்காக காவல்துறை அவரை இப்போது தேடி வந்திருக்கிறது. தனது கணவர் அந்த மோட்டார் திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு வரை அனைத்து சென்ற காவல்துறையை  கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டவர்  தற்போதும் அழைத்தபோது தன் மகள்களுக்கு முன்னால் தன்னை தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தனது கணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.