தமிழகம்

மானபங்கத்தால் தற்கொலை.. குடிகாரன்களால் பெண்ணுக்கு நடந்த துயரம்..! கத்தி முனையில் நடந்த பயங்கரம்..!

Summary:

மானபங்கத்தால் தற்கொலை.. குடிகாரன்களால் பெண்ணுக்கு நடந்த துயரம்..! கத்தி முனையில் நடந்த பயங்கரம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்‌. இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மனைவி சித்ரா (வயது 27). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கார்த்திக் நாயக்கனூரில் பெட்டிக் கடையின் முன்பு இருந்த போது, அதே ஊரை சேர்ந்த கோணமண்டையன் (வயது 40), பிரபாகரன் (வயது 21) ஆகியோர் ரூ. 1000/- மதுபானம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று இரவு கோணமண்டையன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று தனியாக இருந்த அவரின் மனைவி சித்ராவிடம் மதுகுடிக்க ரூபாய் 600/- கேட்ட பணம் கேட்டுள்ளனர். மேலும், பணம் தராவிட்டால் மானபங்கம் செய்து விடுவதாகவும், குத்தி கொலை செய்திடுவதாகவும் மிரட்டியுள்ளனர். கழுத்தை பிடித்து கீழே தள்ளி கொடுமை செய்ததில், சித்ராவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக உறவினர்களிடம் கூறி மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கவே, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளள்து. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரன் மற்றும் கோணமண்டைமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement