பெற்றோரையும், தம்பியையும் பாட்டிலால் குத்திய வாலிபர்: காதலியை பிரிந்ததால் வெறிச் செயல்..!

பெற்றோரையும், தம்பியையும் பாட்டிலால் குத்திய வாலிபர்: காதலியை பிரிந்ததால் வெறிச் செயல்..!


A teenager who stabbed his parents and younger brother with a bottle

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கொமரலிங்கம் பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி (44). இவருக்கு 2இரண்டு மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் மாரிமுத்து (19). இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த சங்கீதா (25) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவரது காதலை பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் பத்து நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையறிந்த மாரிமுத்துவின் பெற்றோர், தங்களது மகனை விட அவர் காதலித்த பெண் 6 வயது மூத்தவர் என்பதை காரணம் காட்டி அவர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், காதலியை பிரிந்ததால் கடந்த பத்து நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட மாரிமுத்து, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதையில் வீட்டுக்கு வந்தவர், காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் போதை தலைகு ஏறிய மாரிமுத்து தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தந்தையையும், தாயையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் தனது தந்தையின்  முதுகுப் பகுதியில் பாட்டிலால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த தனது தம்பியையும் பாட்டிலால் குத்தியுள்ளார். இந்த தகராறில் ஏற்பட்ட அலறல் சுத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மீதும் ஆவேசத்துடன் தாக்க முயற்சி செய்துள்ளார். இதன் பின்னர் மாரிமுத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பாட்டிலால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், கந்தசாமி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.