திடீரென வந்த சத்தம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

திடீரென வந்த சத்தம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!


a-sudden-noise-people-ran-screaming-shocking-informatio

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் நரிக்குறவர் குடும்பத்தினர் சிலர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் முருகன் என்ற நரிக்குறவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பன்றிகளை பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு தயார் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது இருப்பிடத்தில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டானது வெடித்து சிதறியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

Ranipettai

மேலும் முருகனின் மகன் பகவதி என்பவர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.