அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
ஆசை நிறைவேறாததால் மனமுடைந்த மாணவி செய்த காரியத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள கிருஷ்ண தேவராயர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி முத்தம்மாள். இந்த தம்பதியினரின் மகள் மகாலட்சுமி (19). இவர் போடிநாயக்கனூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்கிடையே, மகாலட்சுமி தேனியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தங்களிடம் பணம் செலுத்த வசதி இல்லாததால் அந்த கல்லுரியில் சேர்க்க முடியாது என்று பதில் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போடிநாயக்கனூர் டவுன் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. தகவலறிந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.