அரசியல் தமிழகம்

திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்.! சோகத்தில் திமுகவினர்.!

Summary:

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சி

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களின் மனைவி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

இன்று மதியம் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 7.10 மணியளவில் அவர் காலமானார்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப திமுக தோள் கொடுத்துத் துணை நிற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement