
ஈரோடு: எலிப்பொறியில் சிக்கிய அரிய வகை புனுகு பூனை..!
சத்தியமங்கலம் அருகே எலியை பிடிக்க வைக்கப்பட்ட பொறியில், அரிய வகை புனுகு பூனை சிக்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், ஒப்பலவாடனூர் கிராமத்தை சார்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் எலியை பிடிக்க வீட்டின் அருகே பொறிவைத்துள்ளார். இன்று காலை பொறியில் எலி சிக்கியது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, கண்விழித்து சென்ற சௌந்தர்ராஜன் பொறியை கவனிக்கையில், அதில் கீரிப்பிள்ளை போன்ற விலங்கு பிடிபட்டு இருப்பதை கண்டுள்ளார். கீரிப்பிள்ளையாக இருக்கலாம் என எண்ணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பொறியில் பிடிபட்டது அரிய வகை புனுகு பூனை என்பதை உறுதி செய்தனர். பின்னர், அதனை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக அதிகாரிகள் விடுவித்தனர்.
Advertisement
Advertisement