வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி?!. புயலாக வலுப்பெறுமா?!: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி?!. புயலாக வலுப்பெறுமா?!: வானிலை ஆய்வு மையம் தகவல்..!


A new low pressure area is forming again in the Bay of Bengal

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது. கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று  முன்தினம் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எண்றும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.