நெஞ்சை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது....

நெஞ்சை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது....


A man misused 18 year old girl in kovai

கடந்த ஆண்டு நடந்த பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அச்சம்பவத்தை மையமாக வைத்து மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம். கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி படத்தில் கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

18 year old girl

அவர் முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தனது முகநூல் பக்கத்தில் வந்த நேர்காணல் விளம்பரத்தை பார்த்து பொள்ளாச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த கரூரை சேர்ந்த பார்த்திபன் என்ற வாலிபரை சந்தித்திருக்கிறார்.

நான் எடுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியதோடு மட்டுமல்லாமல் பாலில் மயக்க மருந்து  கொடுத்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில்  ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அந்த மாணவியை  சமாதானம் செய்வதற்காக 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். 

18 year old girl

​​​கடந்த 2020 ஆம் ஆண்டு நம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக மாணவியை பதிவு திருமணம் செய்து கொண்டு கோவைப்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் அந்த மாணவியை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி கடந்த செப்டம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பார்த்திபனை கைது  செய்தனர்.