இரண்டாவது முறை உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி... ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!!

இரண்டாவது முறை உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி... ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!!


a-man-killed-his-girlfriend-in-dharmapuri

தர்மபுரி மாவட்டம் சித்தேரி அடுத்த வெள்ளம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவரது கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன் கீரை பட்டியில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பார்வதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சக்திவேலுக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வசித்து வரும் போதே பார்வதியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் கீழானூர் காப்பு காட்டுக்குச் சென்று இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

​​​​​​Dharmapuri

இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக உல்லாசத்து வருமாறு பார்வதியை சக்திவேல் அழைத்துள்ளார். அதற்கு பார்வதி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த சக்திவேல் நேராக பார்வதி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சக்திவேல் இரும்பு ராடால் பார்வதியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.

பார்வதியை கொலை செய்தது மட்டுமின்றி அவரது கழுத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி கொலுசை எடுத்து கொண்டு தனது இரண்டாவது மனைவி வீட்டில் போய் பதுங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.