பெரும் சோகம்.. காப்பாற்றுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் பறிபோன 3 உயிர்கள்.. ஈரோடு அருகே பரபரப்பு..!

பெரும் சோகம்.. காப்பாற்றுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் பறிபோன 3 உயிர்கள்.. ஈரோடு அருகே பரபரப்பு..!



A great tragedy.. 3 lives lost before they were told to save.. Excitement near Erode..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சின்னகுட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் நாகராஜ் - சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு தர்ஷினி, கீர்த்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சங்கீதா தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு செண்பகப் புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளார். தற்போது இந்த வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி உள்ளது.

erode

அப்போது சங்கீதா வாய்க்காலின் ஓரம் நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த அவரது மகள் தர்ஷினி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா மகளை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து தாய் மற்றும் சகோதரி நீரில் அடித்து செல்வதை பார்த்த கீர்த்தனா அவர்களை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் இவர்களது அலறல் சத்தம் கேட்டு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

erode

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த கடத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் இறங்கி மூவரையும் தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் கோபி கடத்தூர் அடுத்த மில்மேடு பகுதியில் உள்ள வாய்க்காலில் தர்ஷினி மற்றும் கீர்த்தனா உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் அவரது தாய் சங்கீதா என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இருப்பினும் தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.