ஆசை வார்த்தைகளுடன் பேசிய காதலனால் சீரழிந்த சிறுமி!,, கொலை மிரட்டல் விடுத்த காதலன்..!

ஆசை வார்த்தைகளுடன் பேசிய காதலனால் சீரழிந்த சிறுமி!,, கொலை மிரட்டல் விடுத்த காதலன்..!


A girl spoiled by a lover who spoke words of desire

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அந்த சிறுமி (15). இவர் மாத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22)  இவர் டிராக்ட்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சந்தோஷ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அந்த சிறுமி  சந்தோஷிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அப்போது, சந்தோஷ் சிறுமியை  திருமணம் செய்ய கொள்ள மறுத்துள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.