அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தலைக்கேறிய கஞ்சா போதை.. பெற்ற தந்தையை குத்தி கொலை செய்துவிட்டு ஜாமினில் எடுக்க அப்பா வரவில்லையா என்று கேட்ட மகன்.. அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருபவர்கள் அந்தோணி தாஸ் - ஜோஸ்பின் தம்பதியினர். இவர்கள் சம்பவத்தன்று தங்களது மூத்த மகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களோடு இளைய மகனான வினோத் என்பவரும் சென்றுள்ளார்.
இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் வினோத் கஞ்சா போதையில் பெற்றோருடன் அண்ணன் வீட்டிற்கு சென்றபோது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது தந்தை அந்தோணி தாஸ் வினோத்தை கடுமையாக திட்டி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை என்றும் பாராமல் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்தோணி தாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் கஞ்சா போதை தெளிந்த வினோத் தன்னை ஜாமினில் எடுக்க தந்தை வரவில்லையா என்று கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.