கார் மீது பயங்கரமாக மோதிய டூ-வீலர்: பெற்றோரின் கண்முன்னே பலியான 3 மாத குழந்தை..!

கார் மீது பயங்கரமாக மோதிய டூ-வீலர்: பெற்றோரின் கண்முன்னே பலியான 3 மாத குழந்தை..!


A 3-month-old baby died in front of his parents when his two-wheeler crashed into a car

திண்டுக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (30). இவர் அதே பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு சாய்பிரதிக்‌ஷா (4)  என்ற மகளும், குருசாத்விக் என்ற பிறந்து 3 மாதங்களேயான மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அன்புச்செல்வன், மீண்டும் திண்டுக்கல் நோக்கி திரும்பிவந்து கொண்டிருந்தனர். பாளையங்கோட்டை பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக தேனி நோக்கி சென்ற கார்மீது பைக் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், அன்புச்செல்வன் உள்ளிட்ட நால்வரும் தூக்கிவீசப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குருசாத்விக் என்ற 3 மாத குழந்தை தங்களது பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.