பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி!! மாணவியின் கழுத்தை பார்த்த ஆசிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!



9th standard school girl came with thaali

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதேயான பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். மாணவி கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகம், இதுகுறித்து சமூக நலத்துறை பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர்.

விஷயம் அறிந்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள், நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், மாணவியின் பெற்றோர், மாணவிக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து சமூக நலத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அதிகாரிகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.