தமிழகம்

9 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற தம்பதியினர்! கதறி துடிதுடிதுடித்த தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

9 year child killed for urinate in dress

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் அவரது அனிதா. இவர்கள்  அவுரங்காபத்தில் வசித்து வந்த பாரதி என்ற சிறுமியை, அவரது தந்தை இறந்தநிலையில், படிக்க வைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தநிலையில் படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரை படிக்க வைக்காமல் வீட்டு வேலை பார்க்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி பாரதிக்கு படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு சமீபத்தில் இரவில்  படுக்கையில் பாரதி சிறுநீர் கழித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அனிதா ஆகியோர்  சிறுமியை அடித்துள்ளனர். மேலும் சிறுமியின் நெஞ்சில் ஓங்கி உதைத்துள்ளனர். இதில் பாரதி மூச்சு திணறிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

இந்நிலையில் அவர்கள் சிறுமியின் உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க அதன் மேலே சிமெண்ட் கலவையை போட்டுள்ளனர். பின்னர் உறவினர் ஆகாஷ் சவான் என்பவரின் உதவியுடன் உடலை அங்கிருந்து டெம்போ.ஒன்றில் கொண்டு சென்று கசாரா காட்டுப்பகுதியில் வீசி தலைமறைவாகினர்.

இந்நிலையில் அடிக்கடி தனது மகளுடன் தொலைபேசியில் பேசிவந்த பாரதியின் தாய் சமீபகாலமாக தனது மகளுடன் பேசமுடியாததால்  சந்தேகமடைந்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுமி கொல்லப்பட்டது தெரிய வந்தது. பின்னர் காட்டுப்பகுதியில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷ் மற்றும் அனிதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 


Advertisement