புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நபர் என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பவித்ரன் என்ற சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் நேற்று சிறுவன் பவித்ரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவன் பவித்ரன் ஒரு மாணவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பவித்திரனை கண்டித்து பள்ளியில் முட்டி போட வைத்துள்ளனர்.
இதனால் மாணவன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளியில் வேலை செய்யும் 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.