அடக்கடவுளே.. தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து பலி.. பெற்றோர்களே கவனம்.!



8-Year-Old Boy Dies After Viper Snake Bite in Chengalpattu

செங்கல்பட்டில் உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் மித்ரன். இவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த நிலையில், வீட்டில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது. 

தீவிர சிகிச்சை:

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுமக்கள் கவனத்திற்கு:

மழைக்காலங்களில் தரையில் உறங்கும்போது பூச்சிகள் கடிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில் பூச்சி, பாம்பு போன்ற ஊர்வன வீடுகளை நோக்கி பாதுகாப்பான இருப்பிடம் தேடி படையெடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. 

பாதுகாப்பு முக்கியம்:

இது மட்டுமின்றி குட்டைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்களும் முட்டையிட்டு நம் ரத்தத்தை குடிக்கும்போது வைரஸை பரப்பும். டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவையும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.