வீட்டிற்குள் புகுந்த 8 அடி மலை பாம்பு., லாவகமாக பிடித்த வனத்துறையினர்.!!

வீட்டிற்குள் புகுந்த 8 அடி மலை பாம்பு., லாவகமாக பிடித்த வனத்துறையினர்.!!



8-feet-snake-in-kovai

தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால், அவ்வப்போது விலங்குகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 

அந்த பகுதியில் ஜெயராம் எனும் விவசாயி வசித்து வந்துள்ளார். அவரது தோட்டத்து வீட்டுக்குள் எதிர்பாராத விதமாக மிக பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கோயம்பத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். 

பின்னர் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கொம்பனுரின் வன பகுதியில் கொண்டு சேர்த்தனர். மேலும், இது போல் பாம்புகள் மற்றும் வேறு விலங்குகள் குடியிருப்புக்குள் வந்தால் வனத்துறைக்கு அல்லது தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்குமாறு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் அதை பிடிக்கவோ, விரட்டவோ முயற்சிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிக்கப்பட்ட அடுத்த நொடி வனத்துறையினர் வந்து விலங்குகளை அகற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.