2ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் மரணம்.. கதறும் பெற்றோர்.!7 years old boy mystery death in tuticorin

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அஸ்வின் குமார் அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் அஸ்வின் குமாருக்கு ஏற்பட்ட காய்ச்சலால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

Tuticorin

இந்த நிலையில் நேற்று பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்ற நிலையில், சிறுவன் அஸ்வின் குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் குமார் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்துள்ளான்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tuticorin

மேலும், சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.