கண்ட இடங்களில் தொடுறாரு,.பள்ளிக்கு செல்ல பயமாய் இருக்கு.. பெற்றோரிடம் கதறியழுத 5 வயது சிறுமி..! 5-years-old-child-harassed-in-chennai

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த பள்ளி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 38). இவரது 5 வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதியிலிருந்து சிறுமி பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து வந்துள்ளார். பெற்றோரும்  அதனை பொருட்படுத்தாமல் இருந்தவந்த நிலையில், நேற்று பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். 

chennai

ஆனால், சிறுமி பள்ளிக்கு செல்ல பயமாய் இருக்கிறது என்று அழுதுள்ளார். பின் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, தான் வகுப்பறையிலிருந்து மாடிப்படிக்கு கீழே இறங்கும்போது பள்ளியில் பியூனாக பணிபுரியும் ராஜ் என்பவர் கண்ட இடங்களில் தொட்டு பேசுவதாக கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து பள்ளி ஊழியர் ராஜை விசாரித்து வருகின்றனர்.