நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்..." 5 வயது சிறுவன் கொலை.!! தந்தை தலைமறைவு.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள குமாரபுரம், தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமதன்(36). டெம்போ டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வி(31) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த செல்விக்கு அபினவ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் செல்வி மற்றும் செல்வமதனுக்கு வருண் என்ற ஆண் குழந்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பிறந்தது.

மது பழக்கத்திற்கு அடிமையான செல்வமதன் தனது இரண்டாவது மனைவியையும் அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அபினவ் மற்றும் வருண் ஆகியோர் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர். செப்டம்பர் 2ம் தேதி செல்வமதன் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: "என்னையே அடக்க பார்க்கிறாயா.." மனைவி படுகொலை.!! கணவன் தற்கொலை முயற்சி.!!
இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அபினவ் ரத்த வெள்ளத்தில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறான். மேலும் செல்வமதனின் மகனான வருண் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறான். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இறந்த அபினவின் உடலில் ரத்த காயங்கள் இருந்திருக்கிறது. இதனால் செல்வமதன் தனது மனைவியின் குழந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் செல்வமதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... "இரவில் வந்த காதலன்..." சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை.!!