தமிழகம்

அடுத்தடுத்து செத்து விழுந்த 30 பசுமாடுகள்..! மதுரை உசிலம்பட்டி அருகே நேர்ந்த சோகம்.!

Summary:

30 cows died in fire accident near Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாட்டு பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 30 பசுமாடுகள், 2 கன்றுக்குட்டிகள் தீயில் கருகி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். கறவை தொழில் செய்துவரும் இவர் 53 பசுமாடுகள், 100 கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையியல் மாடுகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அதில் 30 பசுமாடுகள், 2 கன்றுக்குட்டிகள் தீயில் கருகி உயிர் இழந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். மேலும், 10 பசுமாடுகள் உயிர்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement