எமனாக மாறிய துணிகாயவைக்கு கம்பி! அடுத்தடுத்து பலியான 3 பேர்!!3 members was died due to electricity attack

ர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தை சேர்ந்தவர் மாதம்மாள். துணி காய வைக்க உதவும் கம்பி அருந்து கீழே விழுந்துள்ளது. அந்தப் பக்கம் சென்ற மாதம்மாள் தெரியாமல் அந்த கம்பியை மிதித்துள்ளார்.

இதனால் அந்த கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே மாதம்மாள் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே மின்சாரம் தாக்கிய மாதம்மாளை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பெருமாள் மற்றும் சரோஜா ஆகிய இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.