தமிழகம்

வயலில் கால் வைத்த 3 பேர்..! துடிதுடித்து உயிரிழந்த சோகம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்!

Summary:

3 members died in trichy by heavy current shock

திருச்சி மாவட்டம் நாவலூர் கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆறுமுகம் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் தனது வயலுக்கு மருந்து தெளிப்பதற்க்காக ஆறுமுகத்தின் மனைவி ஒப்பாயி, மகன் ராமமூர்த்தி, பேரன் குணசேகரன் ஆகிய மூவரும் சென்றுள்ளன்னர்.

இந்நிலையில் அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் அறுந்து ஆறுமுகத்தின் வயலில் கிடந்துள்ளது. வயலில் இருக்கும் ஆபத்து தெரியாமல் மருந்து தெளிக்க சென்ற மூவரும் வயலில் கால் வைக்க, உயர் மின்னழுத்தம் அவர்கள் உடலில் பாய்ந்து மூவரும் அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement