கம்பி வேலி சாய்ந்து விழுந்ததில் 3 மாணவிகள் காயம்: மாநகராட்சி அரசு பள்ளியில் பரிதாபம்..!

கம்பி வேலி சாய்ந்து விழுந்ததில் 3 மாணவிகள் காயம்: மாநகராட்சி அரசு பள்ளியில் பரிதாபம்..!


3-girl-students-injured-as-wire-fence-falls-down-at-mun

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, விஜயாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் தொடக்க பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அளவு கட்டிட வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளிக்கு அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சில வகுப்புகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் சமுதாயக்கூடத்தில் நடந்த வகுப்பில் பங்கேற்ற 4ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வகுப்பு முடிந்த நிலையில் பின்னர் பள்ளிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, சமுதாய கூடத்தை சுற்றி வெளிப்பகுதியில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் மாணவி ஒருவரின் உடை சிக்கியுள்ளது.

Tiruppur

இதன் காரணமாக, சிக்கிய உடையை அந்த மாணவி இழுத்துள்ளார், இதனால் கம்பிவேலி அமைப்பதற்காக நடப்பட்டிருந்தகருங்கல் சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஜெபராணி (9), கவிமலர் (9) மற்றும் மகிழ்ந்தி (9) ஆகியோருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர்களை மீட்ட பள்ளி ஆசிரியர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாணவிகளை அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.