63 வயது மூதாட்டிக்கு 25 வயது இளைஞர் பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!25 years old boy harassment to 63 years old women

63 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை அடுத்த பாகூர் பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

harassment

மேலும் மூதாட்டியிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை திருடி சென்றதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடலூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

harassment

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சிலம்பரசனுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.