தமிழகம்

மது கிடைக்காததால் விபரீத முடிவெடுத்த இருவர் பரிதாப பலி!

Summary:

2 members Drink died

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகள் மற்றும் டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் குடிக்காமல் இருக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பாட்டினத்தினை சேர்ந்த ராஜா, அன்வர், அருண் ஆகிய மூவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். தற்போது மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளனர்.

இந்நிலையில் சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்தால் போதை வரும் கூறியதை அடுத்து மூவரும் அதேபோல் செய்துள்ளனர். அதுவே அவர்களுக்கு எமனாக மாறியுள்ளது. அதன்படி மூவரும் குடித்து அடுத்த நொடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அதில் அருண் மற்றும் அன்வர் ஆகியோர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். ராஜா மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


Advertisement