போதை, கேம், வீண் கெத்து அடிக்ட்டாக வாழ்க்கையை இழக்கும் 2 கே கிட்ஸ்..!

போதை, கேம், வீண் கெத்து அடிக்ட்டாக வாழ்க்கையை இழக்கும் 2 கே கிட்ஸ்..!



2 K Kids Loss their Future

இன்றுள்ள இளம் தலைமுறை எதற்கு? எப்படி? செயல்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை வீடியோ வாயிலாக நாம் கண்முன்னே பார்த்து வருத்தப்பட்டு வருகிறோம்.

இந்நிலையில், முகநூல் கணக்களரின் இடுகையில், "இளம் தலைமுறையின் இன்றைய போக்கு பயமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு, 
பிடித்த பேச்சாளர் - சீமான்,
பிடித்த இயக்குநர் - அட்லீ,
பிடித்த சாப்பாடு - புரோட்டா & நூடுல்ஸ்,
பிடித்த இசையமைப்பாளர் - அனிருத்,
பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்,
பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்,
பிடித்த சொல் - மொக்கை,
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்,
படிக்காமல் ஆல் பாஸ், கஷ்டப்படாமல் வேலை, சம்பளம், வருமானம்.
மரியாதை தரக்கூடாது,
எனக்கு தெரியாதது எதுவுமே இல்லை இறுமாப்பு மனநிலை,
எல்லாம் உடனே கிடைக்க வேண்டும், காசுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்,
சாதி, மதம்தான் அனைத்தும்,
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் மட்டும் தான் உலகம்,
பெண்கள் மீது மரியாதை எள்ளளவும் இல்லை,
ஆசிரியர்கள், மூத்தோர்கள் புழு பூச்சி போல,
சினிமா பாடல் வரிகளை சொந்த ரசனையில் கூட சொல்லத் தெரியாது,
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌,
பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது,
வரி கூட வாசிப்பதில்லை,
பிழையில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது,
ஒரு விஷயத்தை கோர்வையாக சொல்ல தெரியாது,
வீதியில் நின்று விஷம் குடித்தாலும், வீடியோ எடுத்து முகநூலில்  போட வேண்டும்,
பள்ளி சீருடையுடன் டாஸ்மாக் போகும் அளவு தைரியம்‌‌,
வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌, எப்போதும் போதை,
அலைபாயும் மனம்,
ஜட்டி தெரியும் பேண்ட், காண்டாமிருக முடிவெட்டி, கண்களைப் பார்த்து பேச இயலாத வெறித்த பார்வை என இன்னும் பல.,  

இதுபோன்ற பல அபாயத்தை இளம் தலைமுறை முழுமையாக உணர்வது இல்லை. பெற்றோர்களின் அளவு மீறிய செல்லம். அடாவடிக்கு துணை செல்லுதல் என வெளியே தோற்றதால் மனிதனாக இருந்தாலும், உள்ளே மிருகம் உள்ளது. கடந்த ஐந்தாண்டு நிலவரம் மட்டுமே இது.

80 மற்றும் 90 மாணவர்களுக்குக்கும் இளம் தலைமுறைக்கும் மலையளவு வித்தியாசம். காதுகள் இல்லாத புதிய தலைமுறையிடம் பழைய தலைமுறையாக தோற்றுப்போகிறோம். இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையால் காறி உமிழப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அசல் பதிவை காண இங்கு அழுத்தவும்: https://www.facebook.com/groups/199095810430706/permalink/1726034627736809/