நாங்க லவ் மேரேஜ்.., மேஜர்.. எங்களை காப்பாத்துங்கோ.. தாலி கட்டியதும் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த ஜோடிகள்.!

நாங்க லவ் மேரேஜ்.., மேஜர்.. எங்களை காப்பாத்துங்கோ.. தாலி கட்டியதும் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த ஜோடிகள்.!


2 Couple Love Marriage Karur Vadamadurai Police Station Help

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதியை சார்ந்தவர் முத்துபிரேம் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த நர்சிங் கல்லூரி மாணவி முத்துமாரி (வயது 19). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டினை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளனர். 

வடமதுரை சுக்காம்பட்டி களத்தூர் கிராமத்தை சார்ந்தவர் கோகிலா (வயது 23). செங்களத்துப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் நந்தகுமார் (வயது 29). இவர்கள் இருவரும் ஒரே மில்லில் வேலைபார்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.  

இதனையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு தெரிந்து எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருமணத்திற்கு பின்னர் வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் புகவே, இருதரப்பு பெற்றோர்களிடம் சமாதானம் பேசி பெண் காதல் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.