தமிழகம் லைப் ஸ்டைல்

சென்னையில் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Summary:

2 cops trasferred for supporting prostitution in chennai

சென்னையில் பாலியல் தொழிலாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்த 2 காவல்துறை ஆய்வாளர்களுக்கு இடமாறுதல் அளித்தும் மேலும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளர்களாக பணியாற்றியவர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன். இவர்கள் இருவரும், சென்னை நகரில் பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பாலியல் தொழிலை அனுமதித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

தொடர்புடைய படம்

இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை நடத்திய சென்னை காவல் ஆணையர், இரு ஆய்வாளர்களையும் வேறு காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் அளித்து உத்தரவிட்டார். 

மேலும் அந்த இரண்டு ஆய்வாளர்களையும் பணியிடை நீக்கம் செய்யக் கோரி அக்பர் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த இரு ஊழல் அதிகாரிகளும் காவல் துறையில் பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களைபணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

இதையடுத்து, இரு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 


Advertisement