புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அந்த சம்பவத்திற்குப் பிறகு, மூன்று ஆண் நண்பர்களை சந்தித்த இளம் திருநங்கை திடீர் தற்கொலை! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சபீனா. 19 வயது நிறைந்த இவர் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது தோழிகளுடன் வள்ளுவர்க்கோட்டம் அருகே தனது மொபட் வாகனத்துடன் நின்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். மேலும் சபீனாவும் தனது மொபட் வாகனத்தை விட்டுவிட்டு ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் வாகனத்தை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.பின்னர் சிறிது நேரம் கழித்து தனது தோழியுடன் காவல் நிலையதிற்கு சென்ற சபீனா தனது வாகனத்தை கொடுக்கும்படி போலீசார்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி, எடுத்து செல்லும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் சபீனா அங்கு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மனமுடைந்த சபீனா கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில்இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தவறான தொழிலுக்காக நின்றுகொண்டிருந்த சபீனாவின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவரிடம் உரிய அபராதம் பெறப்பட்டு, வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாகனத்தில் வீட்டிற்கு சென்ற அவர் வழியில் ஆண் நண்பர்கள் 3 பேரை சந்தித்துள்ளார். அவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே அவர் வீட்டிற்கு சென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஆண்நண்பர்கள் யாரென விசாரித்து வருவதாகவும் போலீசார்கள் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது.