பகீர்... 16 வயது சிறுமி கடத்தல்... கல்லூரி மாணவர் கைது... காவல்துறையின் துரித நடவடிக்கை.!

பகீர்... 16 வயது சிறுமி கடத்தல்... கல்லூரி மாணவர் கைது... காவல்துறையின் துரித நடவடிக்கை.!


16-year-old-girl-kidnapped-in-the-name-of-love-college

தெலுங்கானாவில் இருந்து 16 வயது கல்லூரி மாணவியை கடத்தி வந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவரிடம் சென்னை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் மாதவரம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் பரபரப்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கல்லூரி மாணவர் ஒருவர் பள்ளி சிறுமியுடன் நின்று கொண்டிருந்தார்.

tamilnaduஅவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் 16 வயது மாணவியை  காதலித்து ஆசை வார்த்தைகளை கூறி சென்னைக்கு அழைத்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநில காவல் துறையை தொடர்பு கொண்டனர்.

tamilnaduதெலுங்கானா மாநில போலீசாரின் உதவியுடன் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோர் மாதவரம் வரவழைக்கப்பட்டு அந்த சிறுமி பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.