தமிழகம்

பெற்றோர் சொன்ன ஒத்த வார்த்தை..! 13 வயது சிறுமி செய்த காரியம்..! அதுக்குன்னு இப்படியா செய்வது?

Summary:

13 years old girl left from home for parents ask to do house works

வீட்டு வேலை பார்க்கச் சொல்லி பெற்றோர் கூறியதால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட சிறுமி நேற்று இரவு திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனதை அடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

உடனே தனிப்படை அமைத்து போலீசார் காணாமல் போன சிறுமியை சென்னை முழுவதும் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமி வடபழனி பகுதியில் தனியாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சிறுமியிடம் இது குறித்து விசாரித்ததில், கொரோனா  ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், பெற்றோர் தன்னை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement