1,2 அல்ல தொடரும் தற்கொலை... தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை... காரணம் என்ன.?12th-std-studnet-committed-suicided-in-tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம் - முருகத்தாள் தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் சரளா என்ற மகள் உள்ளார். சரளா திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சி உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சரளா அதே பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் சரளா பள்ளிக்கு செல்ல தயாராகி சக நண்பர்களுடன் பேசி சிரித்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நண்பர்கள் உணவு அருந்தி சென்றுவிட்ட நிலையில் சரளா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

12 th girl

இது குறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.