தமிழகம்

11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.! எந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும், அரசின் அறிவுறுத்தல் படியும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 9-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால்,மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Advertisement