நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!. திடீர் வெள்ளத்தால் நேர்ந்த துயரம்!.

நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!. திடீர் வெள்ளத்தால் நேர்ந்த துயரம்!.


10'th std students died in river

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களான கிருபாகரன், செல்வகுமார், விவேக் ஆகிய 3 பேரும் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். 

நெருங்கிய நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் விடுமுறை நாள் என்பதால் அம்மாப்பேட்டை அருகே திருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் மூவரும் வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர். அப்போது தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால் மூன்று பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.

students diedஇதன்பயடுத்து உடனடியாக அம்மாபேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி கிருபாகரன், விவேக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு செல்வகுமாரின் உடலும் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அறிந்த மாணவர்களின் குடும்பத்தார்கள் கதறி அழுதனர்.

உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிருபாகரனின் பாட்டி, தனது பேரனை இழந்த அதிர்ச்சியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. மேலும் ஆற்றினுள் யாரும் குளிக்கவேண்டாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.