புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்...
உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை அடுத்து நடப்பு கல்வி ஆண்டின் பாதியில் இருந்து தான் பள்ளி, கல்லூரிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றன. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் கோடை காலமான இந்த சமயத்தில் நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
மேலும் பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது.