பதறிய தாய்!! தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது பெண்குழந்தை உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை..
பதறிய தாய்!! தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது பெண்குழந்தை உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை..

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்- பிரியங்கா தம்பதியினர். ராஜ்குமார் அதே பகுதியில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் கடைக்கு சென்றுவிட்டநிலையில் பிரியங்கா வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர்களது 1 வயது பெண் குழந்தை நேத்ரா வீட்டின் பின்பக்கமாக விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது. குழந்தை தண்ணீரில் தொட்டியில் விழுந்ததை அறிந்த பிரியங்கா உறவினர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஒரு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.