மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட 3 சிறுமிகளுக்கு ஏற்பட்ட சோகம்.. ஒருவர் பலி!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட 3 சிறுமிகளுக்கு ஏற்பட்ட சோகம்.. ஒருவர் பலி!



1 girl death ate maravalli kizhangu

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் சுவாதி, 12 வயதில் ஸ்வேதா மற்றும் 10 வயதில் வனிதா ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதில் தந்தை வன்னி முத்து விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மொத்தம்மாள் நேற்று மரவள்ளி கிழங்கு அறுவடைக்கு சென்றுள்ளார். இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது மரவள்ளி கிழங்கை எடுத்து வந்துள்ளார்.

அதன் பின்னர் மரவள்ளிக்கிழங்கை குழந்தைகளுக்கு சிப்ஸாக செய்து கொடுத்துள்ளார். மேலும் சிறுமிகள் மூவரும் பச்சையாகவும் சாப்பிட்டு உள்ளனர். இதனையடுத்து சிறுமிகள் மூவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

sivagangai

அப்போது இரவு ஒரு மணி அளவில் குழந்தைகள் மூவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் ஸ்வேதா என்ற சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் வனிதாவும், சுவாதியும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சமூகம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.