BREAKING: குஷியோ குஷி! 12,692 அரசு பேருந்துகளில் இலவச பயணம்..! வெற்றி பயணம் திட்டத்தை டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!!



vijay-launches-vetri-payanam-free-bus-scheme

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ இன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் பல்வேறு வகையான அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்க முடியும்.

12,692 அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்

ஏற்கனவே நகர்ப்புற சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது அதன் விரிவாக்கமாக மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகளும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் இனி கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.

இதையும் படிங்க: ஷாக்... நோயாளியின் உயிரை குடித்த ஒரே ஒரு ஊசி...! சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராட்டம்...!!!

தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதமாகும். இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வி, வேலை, மருத்துவப் பயணங்களுக்கு உதவும்

புதிய விரிவாக்கத்தால் தொலைதூரக் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளுக்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களின் இணைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ! இப்படியா ஆகணும்.... கிணறு தோண்ட போன இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்! கனமழையால் ஈரமண் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு! நெஞ்சை உலுக்கும் சோகம்!!!