தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி பெற வாஸ்து சாஸ்திரப்படி படுக்கையறையை இந்த திசையில் வைக்காதீங்க.!?



Vastu tips for happy love life

பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி வீடு கட்ட வேண்டும் என்றாலே அந்த வீட்டில் வாஸ்து திசைகள் அனைத்தும் சரியாக இருந்தால் வீட்டில் இருக்கும் நபர்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வாஸ்து என்பது ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது.

Vasthu tips

மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடகிழக்கு மூலையில் படுக்கை அறை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தம்பதியர்களுக்கு உடல் நலக் கோளாறு, குழந்தைகளுக்கு நோய்வாய்ப்படுவது, தாம்பத்திய உறவில் பிரச்சனை போன்ற பல விதமான குடும்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

படுக்கையறை வீட்டின் வடகிழக்கு மூலையில் இருந்தாலும் படுக்கையை தென்மேற்கு மூலையில் வைப்பது நன்மையை அளிக்கும். வடகிழக்கு திசையில் படுக்கையறை இருந்தால் வாஸ்து யந்திரத்தை வைப்பது சிறந்த பரிகாரமாக அமையும். தெற்கு நோக்கி தலை வைத்து உறங்குவது சிறந்த தூக்கத்தை அளிக்கும்.

Vasthu tips

வடகிழக்கு மூலையில் படுக்கையறை இருந்து வாஸ்து தோஷங்களை  சரி செய்வதற்கு நீலம், பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் படுக்கையறைக்கு வண்ணம் அடிப்பது நல்லது. மேலும் கிரிஸ்டல் போன்ற மணிகளை வாங்கி படுக்கையறையின் வாசலில் கட்டி விடுவது நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். படுக்கை அறையினுள் நறுமணம் மிகுந்த மெழுகுவர்த்தி மற்றும் நறுமணம் மிகுந்த எண்ணெயில் ஏற்றப்படும் விளக்கு போன்றவை வைப்பது தம்பதியர்களுக்கு தாம்பத்திய உறவு நீடிக்க சிறந்த பலனை அளிக்கும்.