நவராத்திரி விரதத்தில் திருமணம் ஆனவராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம்.. நெறிமுறைகள் என்னென்ன?..!

நவராத்திரி விரதத்தில் திருமணம் ஆனவராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம்.. நெறிமுறைகள் என்னென்ன?..!



Navarathiri Viratham Method Tamil

 

துர்கா பூஜை என்று அழைக்கப்படும் நவராத்திரி திருவிழா மிகப்பெரிய விழாவாக சிறப்பிக்கப்படும். இந்த நாளின் 9 நாட்களிலும் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். இவ்வழிபாடு மற்றும் பூஜைக்கான நியதிகள் சில உள்ளன.

அம்பிகையின் வழிபாடுகளில் முக்கியமானதாக கருதப்படுவது நவராத்திரி திருவிழா ஆகும். இந்த நாட்களில் என்னென்ன செய்யலாம், என்ன செய்யகூடாது என இன்று காணலாம். 

நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை வீட்டில் எழுந்தருள செய்யும் காரணத்தால், வீட்டினை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.  ஒவ்வொரு நாளினை தொடங்கும் முன்பும், பிரசாதம் செய்யும் முன்பும் காலை மாலைகளில் 2 வேளை கட்டாயம் குளித்து தூய்மையாக இருக்க வேண்டும்.  

இக்காலங்களில் எலிமியான ஆடைகளை உடுத்த வேண்டும். குங்குமம், வளையல் உட்பட மங்கள பொருளால் அம்மனை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். அன்னை பராசக்தியை போற்றும் மந்திரங்கள் கூற வேண்டும். 

அதனைப்போல அம்மனின் முன் பசு நெய்யினால் அகல் விளக்கு ஏற்ற வேண்டும். இது வீட்டில் செல்வம், நிம்மதியை பெருக்க உதவும். திருமணம் முடிந்தவர்களாக இருப்பின், அவர்கள் 9 நாட்களும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

இந்நாட்களில் அசைவ உணவுகள் உட்கொள்ளல் கூடாது. மது & புகைப்பழக்கம் இருந்தால் அதனை ஏறெடுத்து பார்க்க கூடாது. உணவில் பூண்டு, வெங்காயம், கிராம்பு போன்ற மசாலாக்கள் இருப்பின் அதனை சேர்க்க கூடாது. 

முடிவெட்டுதல், ஷேவிங் போன்றவை செய்ய கூடாது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் சர்க்கரை நோய் கொண்ட பெண்கள் உபவாசம் கூடாது. அம்மனுக்கு படைக்க சமைக்கும் உணவுகளில் தூள் உப்புக்கு பதில் கல் உப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.