பௌர்ணமி நாட்களில் அதிகரிக்கும் தற்கொலை.. ஆய்வில் வெளியான பகீர் உண்மை..!

பௌர்ணமி நாட்களில் அதிகரிக்கும் தற்கொலை.. ஆய்வில் வெளியான பகீர் உண்மை..!



full-moon-day-suicide-will-increase

அமெரிக்காவில் நடந்த ஆய்வில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் நிலவின் வடிவத்தை ஒப்பிட்டு நல்ல நாள், சிறப்பு இல்லாத நாள் போன்ற பல்வேறு கணிப்புகள் மக்களால் செய்யப்படும். தற்போதைய காலகட்டத்தில் இதனை மூடநம்பிக்கை என சிலர் கூறினாலும் முழு நிலவுநாளான பௌர்ணமி அன்று மக்களின் தற்கொலை எண்ணம் அதிகமாவதாக அமெரிக்காவில் இருக்கும் ஆய்வில் பகிர் தகவல் தெரியவந்துள்ளது.

moon

பௌர்ணமியின் வாரத்தில் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்வதாகவும், கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டு அறிக்கைகளின் படி 55 வயது தாண்டும் நபர்களுக்கு பௌர்ணமி சமயத்தில் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

நிலா அடர்த்தியாக இருக்கும் சமயத்தில் மனிதர்களிடம் ஒரு விதமான தாக்கம் ஏற்பட்டு அது அதிகளவு வெளிப்படும் போது தற்கொலை எண்ணம் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்துள்ளன.