சனிபகவான் பாதிப்பில் இருந்து விடுபட.. ஆடிமாத சனியில் இதை செய்தால் போதும்.!



Astrology news about special aadi month

சில தெய்வங்களை வழிபடுவதன் மூலம் சனி பகவானின் பார்வையில் இருந்து தப்பிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக காலபைரவர், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்களை வழிபட்டால் சனி பகவான் நம் மீதான தாக்கத்தை குறைப்பார். ஆடி மாத சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடும் போது சனி பகவானின் பார்வையால் ஏற்படும் பாதகங்கள் விலகும்.

நாளை இந்த வழிபாட்டை மேற்கொள்ள மிகச்சிறந்த நாளாகும். எப்படி வழிபடலாம்? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Aadi

வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட வேண்டும். நெய் தீபத்தை ஏற்றி, 11 முறை வலம் வந்து அதன் பின் ஆஞ்சநேயருக்கு முன்பாக அமர்ந்தோ? அல்லது ஆலயத்தின் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்தோ? கீழ்காணும் மந்திரத்தை முழு மனதுடன் உச்சரிக்க வேண்டும்.

இதையும் படிங்க: நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!

11 முறை இந்த மந்திரத்தை முழு மனதோடு உச்சரிக்கும் போது சனிபகவானின் பார்வை விலகும். கோவிலுக்கு செல்ல முடியாத நபர்கள் வீட்டில் நல்ல நேரத்தில் இந்த வழிபாடை மேற்கொள்ளலாம். வீட்டில் நெய் தீபம் ஏற்றி, மந்திரத்தை 11 முறை கூறலாம்.

அதற்கான மந்திரம்,

"ஸ்ரீராம் ஜெயராம்.!
ஜெய ஜெய ராம்.!” என்பதாகும்.

இந்த வழிபாட்டை முழு மனதுடன் யார் செய்கிறார்களோ? அவர்களுக்கு சனி தோஷம் நீங்கி, அருள் பெறுவார்கள்.

இதையும் படிங்க: சனியின் தாக்கத்தை குறைக்க அனுமன் வழிபாடு.. புல்லரிக்கவைக்கும் புராண வரலாறு.!