கடவுள் பெயரை தேர்வுத்தாளில் இனி எழுதக்கூடாது; அதிர்ச்சியில் மாணவ மாணவிகள்!!

கடவுள் பெயரை தேர்வுத்தாளில் இனி எழுதக்கூடாது; அதிர்ச்சியில் மாணவ மாணவிகள்!!



answer-paper-wright-not-gods-name

ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் மாணவ, மாணவிகள் எந்த மதத்தையும் குறிப்பிடும் கடவுள் பெயரை இனிமேல் தேர்வுத் தாளில் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக தேர்வுத்தாளில் கடவுள் பெயரை குறிப்பிடும் வழக்கம் நாம் படித்த பள்ளிகளிலும் நடந்த ஒரு ருசிகர நிகழ்வு. இந்த பழக்கத்தை தென்னிந்திய மாணவ மாணவிகளும் கடைபிடிக்கிறார்கள் என்பது இந்த அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் தனது மாணவ மாணவிகளுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இனிமேல் யாரும் தேர்வுத்தாளில் எந்த மதத்தின் கடவுள் பெயர்களையும் எழுதக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. 

சில மாணவ மாணவிகள் தங்கள் விடைத்தாள்களில் ஓம் என்றும் சிலுவை குறியிடுதல் தேய்பிறை போன்ற அடையாளங்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பல்கலைக்கழக பதிவாளர் ரமேஷ் அவர்கள் தேர்வு விதிமுறைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு 8 விதிமுறைகளை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் முதலாவதாக இடம் பெறுவது இந்த அறிக்கை தான் என்பது குறிப்பிடத்தக்கது.