விளையாட்டு

பிளிண்டாஃபின் சீண்டலுக்கு பலிக்கடாவான பிராட்! 6 சிக்ஸர்கள் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!

Summary:

yuvaraj reveals the secret behind 6 sixes in an over

2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விலாச காரணம் என்ன என்ற ரகசியத்தை யுவராஜ் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டுவர்ட் பிராட் பந்து வீச்சில் ஒரே ஓவரில் யுவராஜ் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசியதை யாரும் மறக்க முடியாது. அப்படி அவர் வெறித்தனமா அடித்ததற்கான காரணம் இங்கிலாந்து அணியின் பிளிண்டாஃப் தான் என்ன யுவராஜ் கூறியுள்ளார்.

அதே ஆட்டத்தில் பிளிண்டாஃப் யுவராஜை சீண்டினார். அதனால் வெறியான யுவராஜ் அடுத்த ஓவரை வீச வந்த பிராட் பந்தினை பதம் பார்த்தார். மேலும் இங்கிலாந்து வீரர் Dimitri Mascarenhas அதற்கு முன்னதாக யுவராஜ் பந்தில் 5 சிக்ஸர்களை விளாசினார். எல்லாவற்றிற்கும் சேர்ந்து பழிவாங்கவே அப்படி வெறித்தனமாக அடித்ததாக யுவராஜ் தற்போது கூறியுள்ளார்.

Six Sixes - The Perfect Over (Ind Vs Eng, 2007 ICC World T20)

மேலும் 6 சிக்ஸர்களை அடித்த அடுத்த நாள் ஸ்டுவர்ட் ப்ராடின் தந்தை கிறிஸ் பிராட் யுவராஜிடம் வந்து தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாய் என்ன கூறி வருத்தப்பட்டுள்ளார். மேலும் யுவராஜின் ஜெர்ஸியில் கையெழுத்திட்டு தருவாயா என கேட்டுள்ளார்.

உடனே யுவராஜ் தனது ஜெர்ஸியில் "உங்களுடைய வலியை நான் அறிவேன், ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சிலும் ஐந்து சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய  எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாக அமைய  வாழ்த்துகள்" என நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை எழுதி பரிசளித்துள்ளார்.


Advertisement