விளையாட்டு

இந்திய வீரர்களை மட்டும் வைத்து ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா..! ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக தலைவர் கருத்து!

Summary:

Will ipl conducted only with indian players

மார்ச் 29 ஆம் தேதி துவங்குவதாக இருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் தற்போது இருக்கும் ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வரமுடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடர் நடத்தப்படுமா என்ற தகவல் ஊரடங்கு நீங்கிய பிறகே வெளியிடப்படலாம்.இந்நிலையில் இதுகுறித்து ராஜஸ்தான் ராயல் அணியின் நிர்வாக தலைவர் ரஞ்சித் தனது  கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில் ஐபிஎல் தொடரை இந்திய வீரர்களை மட்டுமே வைத்து நடத்தலாம். இந்தியாவிலும் பல திறமைவாய்ந்த வீரர்கள் வளர்ந்துவிட்டனர். இந்தியர்களை மட்டும் வைத்து நடத்தினால் தான் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு பெருமை. இதுகுறித்து ஐசிசி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Advertisement