தனது அன்பு ரசிகர்களுக்காக வாட்சன் செய்த காரியத்தை பாருங்க.! வைரலாகும் வீடியோ!!

தனது அன்பு ரசிகர்களுக்காக வாட்சன் செய்த காரியத்தை பாருங்க.! வைரலாகும் வீடியோ!!


WATSON post video for chennai fans

ஐபிஎல் 12 வது சீசன் இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளஸி மற்றும் வாட்சன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்த போட்டியின் போது சென்னை அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார் மேலும் .வாட்சன் ரன் எடுக்கும்பொழுது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

watson

இந்நிலையில் இரத்தம் சொட்ட வாட்சன் சென்னை அணிக்காக மிகவும் விறுவிறுப்பாக விளையாடினார். இந்த நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சென்னை அணி ரசிகர்கள் யாரும் அனைவரும் அவரை பாராட்டி வந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது  மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனாலும் இது மிகவும் சிறப்பான ஆட்டம் ஆகும். அடுத்த ஆண்டு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று பேசிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாட்சன் வெளியிட்டுள்ளார்.